கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளை கொண்டாடி மகிழ்ந்த இந்திய தேசத்தின் 78-வது சுதந்திர தின விழா
கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் இந்திய தேசத்தின் 78-வது சுதந்திர தின விழா உடையாம்பாளையம் பாரத மாதா திடலில் வெகுசிறப்பாக நடைபெற்றது. பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் M. கெளரி சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் லட்சுமி-சரஸ்வதி குத்துவிளக்கேற்றி வைத்தார்கள். இவ்விழாவில் பிரபல தொழிலதிபரும் -சமூக சேவகருமான பண்ணாரியம்மன் காட்டன் டிரேடர்ஸ் நிறுவனர் A. P. செந்தில் குமார் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து சமாதான புறாக்களை பறக்க விட்டு சிறப்பு செய்தார்கள்.
செளரி பாளையம் மகாகவி பாரதி அம்மன்அடிமை அரசு பொது நூலகத்தின் நூலகர் லட்சுமணசாமி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருள்கள், இனிப்புகள், மற்றும் இயற்கை நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இலட்சிய துளி மக்கள் அமைப்பின் நிறுவனர் தினேஸ்குமார் விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதான உணவுகளை வழங்கினார். சமூக சேவகர்கள் பாலசுப்ரமணியம், சீனிவாசன், கொங்கு சம்பத், வாசகர் வட்ட துணைத்தலைவர் காளிமுத்து உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்கள்.