சரவணம்பட்டி: இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி!

73பார்த்தது
கோவை, சரவணம்பட்டி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வரும் 27ம் தேதி காலை 10: 30 மணி முதல் மாலை 5: 00 மணி வரை இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சியில் ஆடுகளின் இனங்கள், ஆடு வளர்ப்பு முறைகள், கொட்டகை அமைப்பு, நோய் மேலாண்மை, தடுப்பூசி
உள்ளிட்ட ஆடு வளர்ப்பு தொடர்பான அனைத்து தொழில்நுட்பங்களையும் பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்படும். ஆடு வளர்ப்பில் ஆர்வம் உள்ள அனைவரும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் இந்த பயிற்சி குறித்த விவரங்களை அறிய விரும்புபவர்கள் 0422-2669965 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி