கோவை அண்ணா மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தலைவர் மாடசாமி , , செயலாளர் கனகராஜ் , , பொருளாளர் அப்துல் சமது தலைமையில் மனு கொடுத்தனர்
இதில் அவர்கள் கூறியிருப்பதாவத
நாங்கள் 36 ஆண்டுகளாக மார்க்கெட்டில் வணிகம் செய்து வருகிறோம்
இததைநம்பி ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம்
அண்ணா மார்க்கெட்டில் புனரமைப்புக்கு 476 கடைகளுக்கு பணிகள் நடைபெறுவதற்கு நிதி ஒதுக்கி புனரமைப்பு பணிகள் நான்கு கட்டங்களாக செய்து கடை உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என வாய்மொழி உத்தரவு வழங்கியது
அதனால் நாங்கள் ஒரு பகுதியாக புனரமைப்பு செய்வதற்கு கடைகளை காலி செய்து கொடுத்தோம்
தற்பொழுது ஒரு பகுதியில் புனரமைப்புணிகள் நடைபெற்று கடைகள் பொது ஏலம் மூலம் விடப்படும் என மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
இது வாய்வழி உத்தரவுக்கு முரணாக உள்ளது
எனவே மாநகராட்சி நிர்ணயித்துள்ள கட்டணத்தை நாங்கள் மாநகராட்சி செலுத்த தயாராக இருக்கின்றோம்
ஏற்கனவே கடைகள் உள்ளவர்களுக்கு கடைகள் மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் பொதுலத்தை ரத்து செய்து கடைகளை அவரவர்களுக்கே கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்