அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

70பார்த்தது
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினரின் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பாக 8-ம் ஆண்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராஜ், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேஆர் ஜெயராமன், சூலூர் கந்தசாமி மற்றும் திரைப்பட நடிகர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி பரிசளித்து சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிமுக உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்தி