கோத்தகிரி: கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்த பெண் - பரபரப்பு

2973பார்த்தது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பரவக்காடு பகுதியில் நேற்று காலை தேயிலை தொட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மல்லிகா(வயது-50) என்ற பெண்ணை செடியின் மேல் இருந்த பாம்பு ஒன்று கடித்து விட்டது. அவர் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சிகிச்சையின்போது கடித்த பாம்பை அடையாளம் காட்ட அந்த பாம்பையும் ஒரு பையினுள் போட்டு கூடவே எடுத்து வந்துள்ளார். பின்னர் அந்த பாம்பை வானத்துரையினரிடம் ஒப்படைத்த மருத்துவர்கள் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அந்தப் பெண்ணை கடித்த பாம்பு மலபார் பிட் வைப்பர் வகையை சேர்ந்தது என்றும், சிறிதளவு விஷத்தன்மை கொண்டது என்றும் வனத்துரையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி