கோவை ஆட்சியர் ஆபீஸ் முன் திரண்ட தொழில்துறையினர்

4105பார்த்தது
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட தொழில்துறையினரால் பரபரப்பு.

பீக் அவர் உட்பட தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த மாதம் கோவை காரணம்பேட்டை பகுதியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட அவர்கள் தொடர்ந்து முதலமைச்சருக்கு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி கடிதங்களை அனுப்பினர்.

மேலும் கோவை மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கதவடைப்பு போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தனர். இருப்பினும் இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி