பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை வென்ற நாடு என்ற பெருமையை பெற்றது சீனா. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு பிரிவில் சீனாவின் ஹுவாங் யுடிங், ஷெங் லிஹாவ் ஜோடி, கொரியா அணியை வீழ்த்தி தங்கத்தை வென்றது. இந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கொரியா அணி வெள்ளிப்பதக்கத்தையும், மூன்றாம் இடம் பிடித்த கஜகஸ்தான் அணி வெங்கலப் பதக்கத்தையும் வென்றது. மேலும். இந்தியாவின் ரமிதா- அர்ஜூன் இணை 6-வது இடத்தையும், இளவேனில்- சந்தீப் இணை 12-வது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.