தென் இந்தியப் பெருங்கடலில் காணாமல் போன கப்பலைக் கண்டுபிடிக்க இந்தியாவின் உதவியை சீனா நாடியுள்ளது. 39 பேருடன் லு பெங் யுவான் யு என்ற கப்பல் மாயமானது. கப்பலில் இருந்த தொழிலாளர்கள் சீன, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவை சேர்ந்தவர்கள். சீனாவின் வேண்டுகோளுக்கு இணங்க, மே 17 அன்று, ஏர் எம்ஆர் மூலம் இந்தியாவிலிருந்து 900 கடல் மைல் தொலைவில்
இந்தியா தேடுதல் நடத்தியதாக இந்திய கடற்படை ட்வீட் செய்தது. இந்திய கடற்படையின் பி81 விமானம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தேடுதல் வேட்டை நடத்தியது.