அசாம்: கடந்த 2023 பிப்ரவரியில் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு தொடங்கியது. முதற்கட்ட நடவடிக்கையின்போது 3,483 பேர் கைது செய்யப்பட்டனர். 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கை தொடரும் நிலையில் கடந்த டிச. 21-ல் மட்டும் 416 பேர் கைது செய்யப்பட்டதாகவும் 335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.