தாயின் கள்ளக்காதலனால் தாக்கப்பட்ட குழந்தை மாரடைப்பால் பலி

14086பார்த்தது
தாயின் கள்ளக்காதலனால் தாக்கப்பட்ட குழந்தை மாரடைப்பால் பலி
கள்ளக்காதலியின் 1 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் ஓஹியோவில் எட்வர்ட் முர்ரே (23) என்பவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, அமினாதா கெய்ட்டா என்ற பெண் பழக்கமானார். இவருக்கு ஏற்கனவே 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், இம்மாதம் 5ஆம் தேதி முர்ரேவும் குழந்தையும் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தாய் வீட்டில் இல்லை. பின்னர் முர்ரே குழந்தையை எடுத்து படுக்கையில் தூக்கி வீசியுள்ளார். தொடர்ந்து குழந்தையை அடித்து கடுமையாக துன்புறுத்தியுள்ளார். தொடர்ந்து குழந்தை மூச்சுப்பேச்சு இல்லாமல் மயங்கியுள்ளான்.

தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தவிர, குழந்தையின் கல்லீரல் பாதிக்கப்பட்டு, கண்களில் ரத்தம் கசிந்து, மூளை வீங்கியுள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. மேலும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு குழந்தை உயிரிழந்ததாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து குழந்தையின் கொடூர மரணத்திற்கு காரணமான தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி