பசியின் அருமையை உணர்ந்து திட்டங்கள் தீட்டிய தமிழக முதல்வர்கள்

56பார்த்தது
பசியின் அருமையை உணர்ந்து திட்டங்கள் தீட்டிய தமிழக முதல்வர்கள்
பசிக்கான முக்கிய காரணம் வறுமை என்பதை தமிழக முதல்வர்கள் நன்கு அறிந்திருந்தனர். மாணவர்களின் படிப்பு, அவர்களின் குடும்ப பொருளாதார உயர்த்தும் என்பதை மனதில் கொண்டு தமிழக முதல்வர்கள் பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தினர். காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் வரை மாணவர்களின் பசியை போக்க பல சீரிய திட்டங்களை கொண்டு வந்தனர். காமராஜர் கொண்டு வந்த மத்திய உணவு திட்டத்தை, எம்ஜிஆர் சத்துணவாக மாற்ற, கருணாநிதி சத்துணவில் முட்டை கொடுத்தார். பின்னர் ஜெயலலிதா முட்டைகளுடன் கொண்டைக்கடலை, வாழைப்பழங்கள் வழங்கினார். ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி