திருப்பத்தூரில் விழுந்தது "எரிகல்" தான்!

52பார்த்தது
திருப்பத்தூரில் விழுந்தது "எரிகல்" தான்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலத்தில் 5 நாட்களுக்கு முன் தரையில் விழுந்தது விண்கல்லா என்ற சந்தேகம் இருந்து வந்தது. மர்ம பொருள் விழுந்ததில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில் அங்கு விழுந்தது "எரிகல்" தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்து மண் மாதிரியை ஆய்வு செய்ய எடுத்து சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில எரிகல் எதுவும் இல்லை, அது விழுந்த இடத்தில் வெறும் பள்ளம் மட்டும்தான் உள்ளது என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் கூறியுள்ளார்.