கெஜ்ரிவால் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

57பார்த்தது
கெஜ்ரிவால் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனை நீட்டிக்கக் கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ஸ்கேன் மற்றும் உடல் பரிசோதனை செய்ய வேண்டி இருப்பதாக கூறி ஜாமீனை மேலும், 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், "கெஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு குறித்து தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார்" என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி