முதலமைச்சர் கூறுவது ஆகச்சிறந்த நகைச்சுவை: அண்ணாமலை

51பார்த்தது
முதலமைச்சர் கூறுவது ஆகச்சிறந்த நகைச்சுவை: அண்ணாமலை
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ல், தண்டனைகள் கடுமையாக இல்லை என்று திருத்த மசோதா கொண்டு வருகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது, இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், கடந்த 2023 ஆம் ஆண்டு, 23 பேர் பலியாகக் காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு, கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியைப் பதவி நீக்கம் செய்யவில்லை. திமுக மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கமான, போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்குக்கு, திமுகவில் உயர் பதவி கொடுத்து, ₹2,000 கோடி சம்பாதிக்கும் வரை வேடிக்கை பார்த்தீர்கள் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி