சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றம் இல்லை

63பார்த்தது
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றம் இல்லை
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாறாமல் இருக்கும் என நிதித்துறை அறிவித்துள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா மீது 8.2% வட்டி, மூன்று ஆண்டு கால வைப்புத்தொகைக்கு 7.1%, PPF இல் 7.1%, சேமிப்பு வைப்புத் தொகையில் 4%, கிசான் விகாஸ் பத்திரத்தில் 7.5% வட்டி, தேசிய சேமிப்புச் சான்றிதழில் 7.7% மற்றும் மாதாந்திர வருமானத் திட்டத்தில் 7.4% வட்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது.