சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்றுள்ள இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். அவர்களது பணிகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, தவிக்கும் கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கூறும்படி அறிவுறுத்தினார்.