ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியிலும் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் காண்டே தொகுதியிலும் இன்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். சட்டமன்றத் தேர்தல் நவ 13 மற்றும் நவ.20 தேதிகளில் நடைபெற உள்ளது.