ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே இரவில் 50 மி.மி., மழை கொட்டித் தீர்த்தது. ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் விழுப்புரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், நிவாரண பொருட்களை வழங்கினார்.