சோழிங்கநல்லூரில் பன்னோக்கு மருத்துவமனை: பாஜ வேட்பாளர்

83பார்த்தது
சோழிங்கநல்லூரில் பன்னோக்கு மருத்துவமனை: பாஜ வேட்பாளர்
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தென்சென்னை தொகுதிக்கான பாஜ தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி மயிலாப்பூரில் நேற்று நடந்தது. பாஜ மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் கரு. நாகராஜன், தேசிய செய்தி தொடர்பாளர் சி. ஆர். கேசவன், முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி, நாராயண திருப்பதி, பாஜ மாவட்ட தலைவர் காளிதாஸ், தமாகா மாவட்ட தலைவர் லூயிஸ், அமமுக மாவட்ட தலைவர் செந்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தனது தொகுதிக்கான, அக்கா 1825 என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: தென்சென்னை தொகுதியில் ஏற்கனவே உள்ள பிரச்னைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாக கொண்டு இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் எம்பி அலுவலகங்கள் அமைக்கப்படும். தனி மொபைல் செயலி மற்றும் வாட்ஸ்அப் எண்-9550999991 மூலம் புகார்களை தெரிவிக்கலாம். சோழிங்கநல்லூரில் புதிதாக மிகப் பெரிய பன்னோக்கு இஎஸ்ஐ அரசு மருத்துவமனை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி