புளியந்தோப்பு, கிருஷ்ணபிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், ராயபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், கடந்த ஜூலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயித்த பெண்ணுடன், அவர் நெருக்கமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்யாமல், ஆக., 30ல், தான் காதலித்து வந்த பெண்ணை திடீரென திருமணம் செய்தார்.நிச்சயிக்கப்பட்ட பெண், இதுகுறித்து, புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், அருண்குமாரை கைது செய்தனர்.
விசாரணையில், திருமணம் செய்துள்ள பெண்ணை, பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், பெற்றோர் வற்புறுத்தலால் அப்பெண்ணை கைவிட்டு நிச்சயித்த பெண்ணிடம் பழகியதாகவும் கூறியுள்ளார். மேலும், நிச்சயித்த பெண், காதலித்த பெண்ணையும் என்னையும் தொடர்புபடுத்தி தொடர்ந்து பேசி வந்ததால், அந்த அதிருப்தியில் காதலியை திருமணம் செய்ததாகவும் கூறியுள்ளார்.