வில்லிவாக்கம் - Villivakkam

பெட்ரோல் குண்டு வீசுவோம்: சிறுவர் உட்பட இருவர் கைது

பெட்ரோல் குண்டு வீசுவோம்: சிறுவர் உட்பட இருவர் கைது

ரவுடியின் பெயரைச் சொல்லி புதிய துணிகளை எடுத்துக்கொண்டு பணம் கொடுக்க மறுத்த சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடி நாகராஜ் என்ற வெள்ளை நாகராஜ் துணிக்கடைகளில் மாமூல் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வெள்ளை நாகராஜின் பெயரைச் சொல்லி 16 வயது சிறுவன் மற்றும் இரண்டு இளைஞர்கள் வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிக்கடைக்குச் சென்று புதுத் துணி கேட்டுள்ளனர். கடை ஊழியர்கள் கொடுக்க மறுக்கவே பெட்ரோல் குண்டு போடுவோம் என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர். அடுத்து அவர்கள் ஜி. ஏ. ரோட்டில் உள்ள கேஜிஎஃப் ஆகாஷ் என்பவரின் துணிக் கடைக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களை மிரட்டி மூன்றாயிரம் ரூபாய் மதிப்புள்ள துணியை எடுத்துக்கொண்டு பணம் கொடுக்காமல் நகர முயன்றுள்ளனர். இதையடுத்து, கடையின் உரிமையாளர் ஆகாஷ் மற்றும் அவரது தந்தை செந்தில்குமார் ஆகியோர் வண்ணாரப்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீஸார், லிங்கேஸ்வரன் (19), திருமலை (20) மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகியோரை கைது செய்து இருவரை மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர். சிறுவனை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

வீடியோஸ்


சென்னை
பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப பதிவு தொடக்கம்
Sep 16, 2024, 15:09 IST/சைதாபேட்டை
சைதாபேட்டை

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப பதிவு தொடக்கம்

Sep 16, 2024, 15:09 IST
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வியியல் கல்லூரியில் உள்ள 2040 இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று(செப்.16) முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (B. Ed. ) 2024 - 2025ஆம் கல்வி ஆண்டின் முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை www. tngasa. in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்ய கட்டணமாக ரூ. 500 செலுத்தப்பட வேண்டும். SC மற்றும் ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ. 250 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வு செய்தல் வேண்டும். மேலும் கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை போன்ற விவரங்களை www. tngasa. in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாகவே செலுத்தலாம். மேலும் இது குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின், 044 – 24343106 மற்றும் 044 -24342911 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.