தொல்லியல் தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கு சமஸ்கிருதம் தெரிந்தோர் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும், சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய அவர், இந்த அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்