நாசா காலண்டரில் தமிழக மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை

79பார்த்தது
நாசா காலண்டரில் தமிழக மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை
நாசா வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியில் உள்ள ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த புஷ்பத்தூரில் ஸ்ரீ வித்யா மந்திர் என்ற தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் துகிலோவியா, 4-ம் வகுப்பு படிக்கும் லயாஷினி, 7-ம் வகுப்பு படிக்கும் தித்திகா ஆகிய மாணவிகள் வரைந்த ஓவியங்கள், 2024-ம் ஆண்டின் நாசா விண்வெளி காலண்டரில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் 2024-ம் ஆண்டு காலண்டருக்கான போட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் உலகளவில் 194 நாடுகளில் இருந்து நான்கு வயது முதல் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் கலந்துகொண்டனர். அந்த வகையில் பழனி அருகே உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த துகிலோவியா, லயாஷினி, தித்திகா ஆகியோர் சூரிய குடும்பம், ராக்கெட் மற்றும் ஸ்பேஸ் கிராஃப்ட், விண்வெளியில் வீரர் ஆகிய தலைப்புகளில் ஓவியங்கள் வரைந்து போட்டிக்கு அனுப்பினர்.
இந்த மூன்று ஓவியங்களையும் 2024-ம் ஆண்டிற்கான காலண்டரில் அச்சிட நாசா தேர்ந்தெடுத்துள்ளது. இதன்மூலம் ஒரே பள்ளியில் படிக்கும் மாணவிகளின் ஓவியங்கள் நாசாவின் காலண்டரில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி