கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி..!

62பார்த்தது
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி..!
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018 முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக கடந்த 2020ல் போட்டிகள் நடத்தப்படாத நிலையில் கடந்த 2021க்கு 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் அரியானா மாநிலம், பஞ்சகுலாவிலும், 2022ம் ஆண்டிற்கு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. 2023க்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் வரும் 19 முதல் 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேர்வுப் போட்டிகள் தடகளம், 1500 மீ ஓட்டம், 2000 மீ, குண்டு எறிதல், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கத்தில் வரும் 8ம் தேதி காலை 8 மணியளவில் நடக்கும்.

தொடர்புடைய செய்தி