இயந்திர கோளாறு: பயணிகள் தவிப்பு

53பார்த்தது
இயந்திர கோளாறு: பயணிகள் தவிப்பு
சென்னையில் இருந்து பாரிஸ் செல்ல இருந்த ஏர் பிரான்ஸ் விமானம், திடீர் இயந்திர கோளாறால் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு செல்ல முடியாமல் சென்னையில் தவித்து வருகின்றனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 2. 15 மணிக்கு பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிஸ் செல்லும் ஏர் பிரான்ஸ் விமானம் 276 பயணிகள், பணிப்பெண்கள், பொறியாளர்கள், விமானிகள் என 290 பேருடன் புறப்படத் தயாரானது. முன்னதாக விமானிகள், இயந்திரங்களை சரிபார்த்த போது, இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இந்நிலையில் விமானத்தை இயக்கினால் பெரும் ஆபத்து என்று கருதி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். மேலும் விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் விமானம் நாளை(இன்று) அதிகாலை, சென்னையில் இருந்து பாரிஸ் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர், பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். இவர்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தங்கள் நாடுகளுக்கு புறப்பட்டு செல்ல இருந்தவர்கள். விமானத்தில் ஏற்பட்டுள்ள திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக சென்னையில் தவித்துக் கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி