அம்பேத்கர் பிறந்த நாள்: அதிமுக வேட்பாளர் மரியாதை

60பார்த்தது
அம்பேத்கர் பிறந்த நாள்: அதிமுக வேட்பாளர் மரியாதை
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில், சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 134 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதிமுக தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தன். உடன், கழக தேர்தல் பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர், கோகுல இந்திரா, சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் K. P. கந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இருந்தனர். தொடர்ந்து, தென்சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஒக்கியம் பேட்டை பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது அதிமுக கட்சியின் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை கண்ணகி நகரில் பத்தாயிரம் சாக்லேட் கொண்ட பிரமாண்ட மாலையை தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தனுக்கு அதிமுக 195 வது வட்ட செயலாளர் ஓஎம்ஆர் ரவி அணிவித்து உற்சாக வரவேற்பளித்தார்.

தொடர்புடைய செய்தி