அதிவேக ரயில் போக்குவரத்து: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

58பார்த்தது
அதிவேக ரயில் போக்குவரத்து: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
தமிழகத்தில் சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் வழித்தடம் உள்பட 3 வழித்தடங்களில் அதிவேக ரயில் போக்குவரத்துக்காக (மண்டல விரைவு போக்குவரத்து அமைப்புக்காக) விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழகத்தில் 3 வழித்தடங்களில் 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் அதிவேக ரயில் சேவைக்காக விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

குறிப்பாக, சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் வரை 167 கி.மீ. தொலைவுக்கும், சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் வரை 140 கி.மீ. தொலைவுக்கும், கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம் வரை 185 கி.மீ. தொலைவுக்கும் வழித்தடங்கள் உருவாக்க, தேவையான விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, இதற்கான முயற்சியை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கியது. இந்நிலையில், 3 வழித்தடங்களில் அதிவேக ரயில் போக்குவரத்துக்காக (மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு- RRTS) விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி