தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை: விஜய்

79பார்த்தது
தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை. அது அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய விஜய், நடந்து முடிந்த பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த தம்பி, தங்கைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்.

இந்த மாதிரி விழாவில் ஒரு சில நல்ல விஷயங்களை தாண்டி வேறு ஏதும் சொல்ல தெரியவில்லை. நீங்கள் எல்லாருமே அடுத்தகட்டத்தை நோக்கி செல்கிறீர்கள். நீங்கள் என்னவாக வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, அனைத்து துறையும் நல்ல துறைதான். நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதில் உங்களது முழு ஆர்வத்தை, 100 சதவிகித உழைப்பை கொடுத்தால் வெற்றி நிச்சயம்.

செய்தி என்பது வேறு, கருத்து என்பது வேறு. எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் உண்மையிலேயே நமது நாட்டில் என்ன பிரச்சினை, மக்களுக்கு என்ன பிரச்சினை, சமூக தீமைகள் பற்றி தெரியவரும். அதை தெரிந்துகொண்டால் ஒருசில அரசியல் கட்சிகள் செய்கின்ற பொய் பிரச்சாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய நல்ல விசாலமான உலக பார்வை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். அது வந்துவிட்டாலே, அதைவிட ஒரு சிறந்த அரசியல் வேறு எதுவுமே இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி