ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எனக்கும் துளி அளவும் சம்பந்தம் இல்லை என போலீஸாரின் விசாரணை முடிந்து வெளியே வந்த பால் கனகராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் பாஜக மாநில துணை தலைவர் பால் கனகராஜ் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உள்ள ரவுடிகள் தடுப்பு பிரிவில் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிந்து வெளியே வந்த பால் கனகராஜ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது, 33 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். பல்வேறு குற்றவாளிகளுக்கு வழக்கு நடத்தியவன் என்ற முறையில் என்னை விசாரிப்பதினால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பு ஏதும் கிடைக்கலாம் என்ற கோணத்தின் அடிப்படையில் என்னை விசாரணைக்காக அழைத்து விசாரித்தனர்.