நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட மடங்களுக்கு தக்கார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நித்யானந்தா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள வேதாரண்யம் ஸ்ரீ போ. கா. சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாச்சல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பால்சாமி, சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோயில் மடம் ஆகிய நான்கு மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்து, மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார். இதுதொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், அறநிலையத் துறையின் இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் வழக்கு தொடர பொது அதிகாரம் வழங்கப்பட்ட நித்யா கோபிகா ஆனந்த் என்ற உமாதேவி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி எம். தண்டபாணி முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அந்த 4 மடங்களையும் நிர்வகிக்க தக்காரை நியமித்து அறநிலையத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், நித்யானந்தாவின் ‘கதவைத்திற காற்று வரட்டும்’ என்ற வரிகள் ரொம்பப் பிடிக்கும். அந்த வார்த்தைகளில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன என்று கருத்து தெரிவித்தார்.