‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும்: திருமாவளவன்

72பார்த்தது
தென்சென்னை தொகுதியில் திமுகவேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்த விசிக தலைவர் திருமாவளவன், இந்த நாடும், ஜனநாயகமும் காப்பாற்றப்பட ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுகவேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, விருகம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய திருமாவளவன், இந்த நாடும், ஜனநாயகமும் காப்பாற்றப்பட வேண்டும். அகில இந்திய அளவில் ‘இண்டியா’கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி