விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தேர்தல் நடத்தை விதிகள் அமல்

82பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தேர்தல் நடத்தை விதிகள் அமல்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மறைவால், அத்தொகுதி காலியாக இருந்தது. இ்ந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி உட்பட நாடு முழுவதும் 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி வரும் ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது: “விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போதிலிருந்து தொகுதி சார்ந்த விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

மாவட்டத்தில், பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும். ரூ. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரொக்கம் எடுத்துச்செல்ல ஆவணம் வைத்திருக்க வேண்டும் என்பது உட்பட தேர்தல் விதிகளில் கூறப்பட்ட அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி