ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்: காங்.

74பார்த்தது
ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்: காங்.
ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் மத்திய பாஜக அரசு பாரபட்சமாக செயல்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை அப்பட்டமான அரசியல் பாகுபாடு காரணமாக இண்டியா கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்கிற தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளன. இதனை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ், திமுக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளன. முன்பெல்லாம் ரயில்வே துறைக்கென்று தனி படஜெட் நீண்டகாலமாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதன் மூலம் எந்தெந்த மாநிலங்களுக்கு எந்தெந்த திட்டங்கள், எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்கிற விபரங்கள் வெளிவரும்.

ஆனால் ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு பொது படஜெட்டோடு இணைக்கப்பட்டு தற்போது ரூ. 2. 65 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது என்கிற விபரம் தான் வெளிவந்தது. எதற்கு எவ்வளவு நிதி என்கிற விபரங்கள் தற்போது தான் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி