சென்னை: பாஜகவின் வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்துக்கு செல்லும்: சேகர் பாபு

65பார்த்தது
சென்னை: பாஜகவின் வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்துக்கு செல்லும்: சேகர் பாபு
2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திருப்பரங்குன்றம் கோயில், தர்கா பிரச்சினையை பாஜக கையில் எடுத்திருப்பதால், அவர்களுடைய வாக்கு சதவீதம் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (பிப். 5) செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், தயவுசெய்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என்று குறிப்பிட வேண்டாம். முழுக்க முழுக்க அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எங்களைப் பொருத்தவரை பாஜக-வினர் தான் என்று நான் குற்றம்சாட்ட விரும்புகிறேன். அவர்கள் ஏதோ ஒரு எண்ணத்தை மையமாக வைத்து, இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நேற்று நடத்தப்பட்ட போராட்டம் என்பது தேவையற்ற ஒரு போராட்டம். 

பல்வேறு ஊடகங்களுக்கு நான் இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அந்த ஊடகங்கள், அப்பகுதியில் வசிக்கின்ற மக்களின் பேட்டிகளை எடுத்திருந்தனர். அதில் பேசிய இஸ்லாமிய, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், நாங்கள் அண்ணன் தம்பிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பிரிவினையும் இல்லை. தேவையில்லாமல், இந்த பகுதிக்கு வரும் வெளியூரில் இருந்து வருபவர்கள்தான், இப்பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி