பஸ்கள் ஜன்னலும் திறக்காததால் அவதி

52பார்த்தது
பஸ்கள் ஜன்னலும் திறக்காததால் அவதி
சென்னை மாநகர, 'ஏசி' எனப்படும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படும் பல பஸ்களில், 'ஏசி' சாதனம் சரிவர இயங்காததால் குளிர்ச்சியான சூழல் கிடைப்பதில்லை. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தாம்பரம் - பிராட்வே, பிராட்வே - திருப்போரூர், திருவான்மியூர் - தாம்பரம், கோயம்பேடு - சிறுசேரி உள்ளிட்ட வழித்தடங்களில், குளிர்சாதன வசதியுடன் 'ஏசி' பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் ஆரம்ப கட்டணம் 15 ரூபாய்.

பல பேருந்துகளில், 'ஏசி' சரிவர இயங்கவில்லை. கதவுகள் மட்டுமின்றி, ஜன்னல்களும் மூடப்பட்டு இருப்பதால், காற்று கிடைக்காமல் வியர்த்து கொட்டி பயணியர் அவதிப்படுகின்றனர். இதனால் நடத்துனர்களுடன் வாக்குவாதம் செய்யும் நிலை தொடர்கிறது.

நேற்று, திருப்போரூர் - பிராட்வே வழித்தடத்தில் இயக்கிய, 102 ஏசி பேருந்தில் புழுக்கம் காரணமாக அவதிப்பட்ட பயணியர், பேருந்தின் ஜன்னலையாவது திறக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'ஏசி' இயங்காததால், சாதாரண கட்டணம் வசூலிக்குமாறும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி