பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை எண்ணிக்கை அதிகரிப்பு

69பார்த்தது
பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை எண்ணிக்கை அதிகரிப்பு
பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். வேட்பாளருடன் கட்சி நிர்வாகிகளும் சென்று வாக்கு கேட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 2 வார காலமே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் வாக்குச்சாவடி ஏஜெண்டுகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்று உள்ளன. இதனால் பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் இன்று தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடைபெற்றது. ரூ. 50, 000 மேல் பணம் எடுத்துச் செல்ல வணிகர்கள் அனுமதி கோரிய கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாள் அன்று வாக்குச்சாவடிக்கு வெளியே பந்தல், நாற்காலிகள் போட அறிவுறுத்தியுள்ளார். பதற்றமான அனைத்து வாக்குச்சாவடிகளிளும் துணை ராணுவப் படையினர் பணியில் இருப்பார்கள். கண்காணிப்பு குழுக்கள் 906ஆகவும், பறக்கும் படை 893 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி