மீனவர் நலத்துறை சார்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு

60பார்த்தது
மீனவர் நலத்துறை சார்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ. 134. 29 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 6 புதிய மற்றும் 4 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ. 11. 65 கோடி செலவிலான கட்டடங்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 134 கோடியே 29 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 புதிய மீன் இறங்குதளங்கள் மற்றும் 4 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 11 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம், நிருவாகம் மற்றும் கல்வித் தொகுதியின் கூடுதல் கட்டடம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல், மீன் உற்பத்தியை அதிகரித்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அரசு செயல்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி