பெரம்பூர் இஎஸ்ஐ சாலை பகுதியில் குட்கா விற்றவர் கைது

75பார்த்தது
பெரம்பூர் இஎஸ்ஐ சாலை பகுதியில் குட்கா விற்றவர் கைது
திருவிக நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெரம்பூர் இஎஸ்ஐ சாலை பகுதியில் குட்கா பொருட்கள் தயாரித்து விற்கப்படுவதாக திருவிக நகர் இன்ஸ்பெக்டர் கிருபாநிதிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் காலை போலீசார் ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் 2 கிலோ மாவா, மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் சீவல் பாக்கு மற்றும் ஜர்தா உட்பட 5 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனை விற்பனை செய்த பெரம்பூர் டீட்ஸ் கார்டன் மூன்றாவது தெருவைச் சேர்ந்த தினேஷ்குமார் (30) என்ற நபரை போலீசார் கைது செய்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி