நாய் இறப்பு: கதறிய ஆட்டோ ஓட்டுனர்கள்

68பார்த்தது
நாய் இறப்பு: கதறிய ஆட்டோ ஓட்டுனர்கள்
ஆதம்பாக்கம், பரங்கிமலை ரயில் நிலையம் அருகே, ஆட்டோ நிறுத்தம் உள்ளது. சாலையில் கிடந்த நாய் குட்டியை 13 ஆண்டுகளாக வளர்த்தனர்.

'சைக்கோ' என பெயரிடப்பட்ட அந்த நாய் வயது மூப்பு காரணமாக, நேற்று இறந்தது. ஆட்டோ ஓட்டுனர்கள், கண்ணீர் விட்டு அழுதனர். பின், அந்த நாய்க்கு, மாலை அணிவித்து, மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தினர்.

பின், உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று, அருகிலுள்ள காலி மனையில் புதைத்தனர். 13 ஆண்டுகளாக உடன் பழகிய நாயின் மரணத்தால், ஒரு நாள் ஆட்டோக்களை இயக்காமல், துக்கம் அனுசரித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி