சென்னையில் வரலாறு காணாத உச்சமாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ59, 520 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ரூ. 56, 400 ஆக ஒரு சவரன், ஆபரணத்தங்கத்தின் விலை இருந்தது. அதன் பின்னர் குறிப்பிட்ட இடைவேளையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. மாறி, மாறி தங்கத்தின் விலை காணப்பட்டதால் நகை பிரியர்கள் வெகுவாக அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், பெண்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத உச்சத்துக்குச் சென்றுள்ளது. ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை ஒரு சவரன் 520 ரூபாய் உயர்ந்து ரூ. 59, 520 விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ. 65 அதிகரித்து, ரூ. 7, 440 ஆக உள்ளது.