சென்னையில் 16 பேருக்கு குண்டாஸ்

71பார்த்தது
சென்னையில் 16 பேருக்கு குண்டாஸ்
சென்னையில் கடந்த 7 நாட்களில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 16 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் கொலை உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ைகது செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 22ம் தேதி முதல் 28ம் ேததி வரையிலான 7 நாட்களில் 16 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். அமைந்தகரையை சேர்ந்த மதன் குமார் (36), வியாசர்பாடியை சேர்ந்த தமீம் சீலன் (எ) சீலன் (27), வில்லிவாக்கம் பகுதியில் உதயகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் செங்குன்றம் பகுதியை சேர்ந்த சூர்யா (23), வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (30), எம். கே. பி. நகர் பகுதியில் வசந்தா என்பவரை ெகாலை செய்த வழக்கில் வில்லிவாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார் (42), திருவொற்றியூர் பகுதியில் ராசய்யா என்பவரை கொலை செய்த வழக்கில் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஷ்யாம் (எ) சாமுவேல் (25), ஜீவா (எ) ஜீவானந்தம் (24), ராம் (எ) ராமச்சந்திரன் (31), முரளி (33), திருவான்மியூர் பகுதியில் கவுதம் என்பவரை கொலை செய்த வழக்கில் கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் (27) என மொத்தம் 16 பேரை போலீசார் பரிந்துரைப்படி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி