தேர்வை தள்ளி வைக்க வேண்டும்: எடப்பாடி

50பார்த்தது
தேர்வை தள்ளி வைக்க வேண்டும்: எடப்பாடி
மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு வரும் ஜனவரி 6 மற்றும் 7ம் தேதி நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, வரும் ஜனவரி 6, 7 ஆகிய தினங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமாக, கனமழையாலும் வெள்ளத்தாலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென்மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் இயல்பு நிலை இன்னும் முற்றிலுமாகத் திரும்பவில்லை. இம்மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தமிழக அரசுப் பணித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த மூன்று வார காலமாக, அவர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்நிலையில், குறிப்பிட்ட தேர்வுகளை நடத்துவது முறையானதாக இருக்காது என்பதால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி