ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூன் 14, 15ல் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆசிரியர்கள் ஜூன் 10க்குள் எமிஸ் மூலம் பதிவேற்ற வேண்டும். மறுநாள் கல்வி அலுவலர் அதற்கான ஒப்புதலை வழங்குவார். வருவாய் மாவட்டத்துக்குள்ளான கலந்தாய்வு ஜூன் 14, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு ஜூன் 15ல் நடைபெறும்.