விநாயகர் சதுர்த்தி: பதிவுத்துறை அலுவலகங்கள் விடுமுறை

53பார்த்தது
விநாயகர் சதுர்த்தி: பதிவுத்துறை அலுவலகங்கள் விடுமுறை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை செயல்படும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக பத்திரங்கள் பதிவாகும், 100 சார் பதிவாளர் அலுவலகங்கள், சனிக்கிழமையும் செயல்பட்டு வந்தன. இதனால், பொதுமக்கள் தங்கள் வேலை பாதிக்காமல், பத்திரப்பதிவு மேற்கொள்ள இது வாய்ப்பாக அமைந்தது.


இந்நிலையில், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த உத்தரவில், 'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமைகளில் செயல்படும், 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு, செப். , 7 மட்டும் விடுப்பு அளிக்கப்படுகிறது. இதனால், அந்த நாளில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படாது' என, தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :