கோயம்பேட்டில் காய்கறிகள் விலை சரிவு

579பார்த்தது
கோயம்பேட்டில் காய்கறிகள் விலை சரிவு
கோயம்பேடு மொத்த விலை காய்கறி மார்கெட்டில் நேற்று வரை ரூபாய் ₹250யிற்கு விற்கப்பட்ட பீன்ஸ் ஒரே நாளில் ₹150 சரிவை கண்டு ₹100க்கு விற்கப்படுகிறது. இதர காய்கறிகளும் ₹3 முதல் ₹10 வரை சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தக்காளி மற்றும் வெங்காயம் விலை உயர்வு கண்டிருக்கிறது. தக்காளி மற்றும் வெங்காயம் வரக்கூடிய நாட்களில் விலை உயர்ந்துகொண்டே போகும் என வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.