சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் காலிக்கு வயது 32. இவரது மனைவி நாசியா வயது 32. இருவரும் 6 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குழந்தை இல்லாத இந்த தம்பதி அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.
கணவன் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் நாசியா விவாகரத்து செய்யும் எண்ணத்தில் இருந்துள்ளார். சம்பவத்தன்று நாசியா அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது காலிக் அயன் பாக்ஸை சுடுகாட்டி நாசியாவை முகம், கை, கால் என தாறுமாறாக சூடு வைத்துள்ளார். அலறி துடித்த நாசியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். காலிக்கை வேப்பேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.