2024-2025ம் கல்வி ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு அக்டோபர் 19ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்று வெற்றி பெறும் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழியாக 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1500 வீதம் உதவி வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் இத்தேர்வில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.