25 கிலோ எடைக்கும் கூடுதலாக உள்ள அரிசி மூட்டைகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், சில்லறை விற்பனையில் அதன் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் உள்ள அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்களுக்கு தற்போது 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு பெறும் வகையில், அரிசி விற்பனையாளர்கள் தற்போது 26 கிலோ எடை மூட்டையில் அவற்றை விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், 25 கிலோவுக்கு மேல் உள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை பைகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவதால் அவை விவசாய பண்ணை விளைபொருள் அல்ல என்று GST கவுன்சில் ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளது. இதனை மத்திய மறைமுக வரிகள் வாரியம் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உத்தரவு வரும் என்றால், 26 கிலோவுக்கு மேல் பைகளில் விற்கப்படும் பொருள்களுக்கு 5% GST விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.