மாணவர்களுக்கு கால தாமதமின்றி உறுதி சான்றிதழை வழங்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6- 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள், 7. 5% இடஒதுக்கீட்டில் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர ஏதுவாக, அந்தந்த பள்ளிகள் உறுதிச் சான்றிதழ் தர வேண்டும். ஆனால், சான்றிதழ் வழங்க தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியான நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.