புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி..!

56பார்த்தது
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி..!
சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மலருகின்ற புத்தாண்டில்,
மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல
இறைவனை மனதார பிரார்த்தித்து,
புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்,
புரட்சித் தலைவி அம்மா
ஆகியோரது நல்வழியில்,
மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த
புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி